காசா நகரில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து கடந்த ஏழு நாட்களாக இஸ்ரேல் இராணுவம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் காரணமாக காசாவில் இதுவரை 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 340,000 க்கும் மேற்பட்ட மக்கள் காசாவைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா நகரில் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறா விட்டால் நிலைமை மிகவும் மோசமாகும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை காசாவில் 3600 க்கும் மேற்பட்ட இலக்குகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதாக வும் 4000 தொன் எடையுள்ள 6000 குண்டுகள் இதுவரை வீசப்பட்டுள்ளன எனவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment