நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு வருகின்ற 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்...


நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு வருகின்ற 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்: ஒரு நபருக்கு 6500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன்  ; ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது.  

குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, 

பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். 

இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட "சிரியா பாணி" என்ற கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 7 ஆம் தேதி சனி கிழமை காலை நாகை துறைமுகம் வர உள்ள கப்பலின் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது

சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். பின்னர் 10 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது. KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial