மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகா

 



மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக லைகாவின் ஞானம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

லைகாவின் ஞானம் அறக்கட்டளை மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்க அனர்த்தம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்கின்றது.

குறித்த அனர்த்த சம்பவம் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணங்கள் மற்றும் ஆதரவை வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

நிலநடுக்கம் தொடர்பான தகவல் எமக்கு எட்டியவுடன், எங்கள் குழுமத்தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விரைவாக மொராக்கோ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அர்ப்பணிப்புள்ள களக் குழுவைத் திரட்டி துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

மேலதிகமாக, இலண்டனில் உள்ள தலைமையகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதுடன், உணவு, தங்குமிடம், மீட்பு முயற்சிகள் மற்றும் பிற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக அக்குழு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு உதவ வேண்டிய அவசரத் தேவையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய எங்கள் களக் குழுவும் பிரித்தானிய குழுவும் முழுமையாகத் தயாராக உள்ளன.

தற்போதைய கடினமான தருணத்தில் அனர்த்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஆதரவைப் பெறுவதை லைகாவின் ஞானம் அறக்கட்டளை உறுதிசெய்கிறது.
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டின் மிகக் கொடிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது. குறித்த அனர்த்தம் காரணமாக தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐத் தாண்டியுள்ளதுடன், 10 ஆயிரத்தி்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதுடன், மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக லைகாவின் ஞானம் அறக்கட்டளை ஆதரவினை வழங்க முன்வந்துள்ளது.

குறித்த துயரமான சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவ லைகாவின் ஞானம் அறக்கட்டளை கடமைப்பட்டுள்ளது.

லைகா ஞானம் அறக்கட்டளை கூட்டு நடவடிக்கை மற்றும் சமூக ஆதரவின் சக்தியை உறுதியாக நம்புகிறது. எங்களின் நிவாரண முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு குறித்த உதவிகள் தேவையானவர்களை சென்றடைவதை உறுதிசெய்ய, உள்ளூர் அதிகாரிகள், நிவாரண அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்.

தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக இருப்போம் என்றும் உறுதியளிக்கிறோம்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மொராக்கோ மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதாகும்.

மேலும் அவர்கள் தம்மை ஆற்றுப்படுத்தி மீள்கட்டமைக்கும் செயல்முறைகளை ஆரம்பிக்கும்போது தொடர்ந்தும் ஆதரவையும் உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial