பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த சந்திரமுகி தற்போது இரண்டாம் பாகமாக உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
ஆனால் இதில் சூப்பர் ஸ்டாருக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதுதான் ரசிகர்களை பெறும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஏனென்றால் முதல் பாகத்தில் வேட்டையன் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் மிரட்டி இருப்பார். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லரில் வேட்டையனாக இருந்த ராகவா லாரன்ஸ், அதுக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்ற கருத்துக்கள் தான் இப்போது ஏமாற்றத்துடன் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதனால் படம் எந்த அளவுக்கு ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் என்ற விவாதங்களும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இந்த சூழலில் ராகவா லாரன்ஸ், கங்கனாவுக்கு ஜால்ரா தட்டும் வகையில் ஜோதிகாவை மட்டம் தட்டி ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார்.
அதாவது முதல் பாகத்தில் வேட்டையனுக்கு நிகராக சந்திரமுகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு இப்போதும் கூட பேசப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது ராகவா லாரன்ஸ், ஜோதிகா ஒரிஜினல் சந்திரமுகி கிடையாது என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் சந்திரமுகி மாதிரி தான் நடித்தார். ஆனால் கங்கனா சந்திரமுகியாகவே நடிக்கிறார். அப்படி பார்த்தால் ஜோதிகாவுடன் கங்கனாவை ஒப்பிட முடியாது என்று மோசமாக பேசியிருக்கிறார். இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி நீங்களே வேட்டையன் கேரக்டருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவராக இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது ஜோதிகாவை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பட ப்ரமோஷனுக்காக தேவை இல்லாமல் பேசி இப்போது ஒரு பிரச்சனையை பற்ற வைத்திருக்கிறார் மாஸ்டர் லாரன்ஸ்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment