தற்போதைய காலத்தின் படி போட்டிகள் எல்லா பக்கமும் அதிகரித்து வருகிறது. அதிலும் சினிமாவில் உள்ள நடிகர்களுக்குள் இருக்கும் போட்டிக்கு அளவே கிடையாது. அந்த வகையில் ரொம்பவே மெனக்கெடு செய்து படங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து வருகிறார்கள்.
இதனால் மாதத்திற்கு கிட்டத்தட்ட 20 படங்கள் திரையரங்குகளில் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த நான்கு மாதங்களுக்கு பல பெரிய படங்கள் திரையரங்குகளில் வர இருக்கிறது.
அதில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
இதனை அடுத்து ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.
அடுத்ததாக ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளிவர இருக்கிறது.
இதனை எடுத்து கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியில் வர இருக்கிறது.
இதனை எடுத்து விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களும் எப்பொழுது இந்த படம் வெளிவரும் என்று காத்துக் கொண்டிருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இப்படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது இதன் மூலம் 1000 கோடி வசூலை பெற்று விடலாம் என்று லோகேஷ் கணக்கு போட்டு வைத்திருக்கிறார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன்ஸ் கதையை வைத்து உருவாகியுள்ள அயலான் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் போன்ற இரண்டு திரைப்படங்களும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா 2 நவம்பர் மாதமும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் மாதமும் வெளியாக இருக்கிறது
இன்னும் இந்த இரண்டு படங்களுக்கும் சரியான தேதியை படக்குழு அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து பத்து படங்களுக்கு மேலாக திரையரங்குகளை அலங்கரிப்பதற்கு தயாராக கொண்டிருக்கிறது.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் இப்படங்களை பார்த்து திருவிழா மாதிரி கோலாகலமாக கொண்டாடப்படுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment