தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம் டாப் நடிகர்களின் படங்களை பல கோடி செலவில் தயாரித்து அதிக லாபம் பார்த்து வருகிறது. இந்த நிலையில் லைக்கா நிறுவனம் விஜய்யை பகைத்துக் கொண்டதாகவும், அந்த பகை 9 வருடங்களாக நீடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தற்சமயம் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பற்றிய பேச்சுத்தான். இவருக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பான படிப்பை படிக்க வைப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பினார். படித்து முடித்ததும் விஜய் போலவே ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவருடைய தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைக்கா தயாரிக்கிறது இந்த விஷயம் விஜய்க்கு தெரியாதாம். தன்னிச்சையாக தன் முயற்சியினால் லைக்காவிடம் கதை சொல்லி சாதித்துள்ளார் விஜய் மகன் சஞ்சய்.
கிட்டத்தட்ட 9 வருடங்களாக லைக்காவிற்கு விஜய் கால் சீட் கொடுக்கவில்லை. விஜய் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்த கத்தி திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. விவசாயத்தைப் பற்றி வலுவாக பேசிய இந்த படம் வசூல் ரீதியாக சோடை போனாலும், விமர்சன வாயிலாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
கத்தி படத்திற்கு பின் இவர்கள் கூட்டணி போடவில்லை. கத்தி படம் வசூல் ரீதியாக லைக்காவிற்கு திருப்தி அளிக்கவில்லையாம். லைக்கா அதிருப்தியில் இருப்பது விஜய் காதுகளுக்கு சென்றுள்ளது. ஆனால் படம் விமர்சனம் ரீதியாக சூப்பர் ஹிட். ஆனால் லைக்கா வசூலாகவில்லையே என்ற அதிருப்தியில் இருந்தது. இதனால் தான் விஜய் அடுத்தடுத்து லைக்காவிற்கு கால் சீட்டே கொடுக்கவில்லை.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment