சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. பட ரிலீஸ்க்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு தலைவரின் முந்தைய படங்கள் போல் ஏதாவது சொதப்பி விடுமோ என பயந்தும் இருக்கிறார்கள்.
இயக்குனர் நெல்சன் ஒரு பக்கம் பட வேலைகளை ஜாலியாக பார்ப்பது போல் காட்டிக்கொண்டாலும், மறுபக்கம் மிரட்சியுடன் தான் காணப்படுகிறார்.
இதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே சுற்றி பேசப்படும் நெகட்டிவான விமர்சனங்கள் தான். இது பற்றி ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இருவருமே இசை வெளியீட்டு விழாவின் போது வெளிப்படையாக பேசி இருந்தார்கள்.
இந்தப் படத்தில் ரஜினி ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கிறார் என்பதை தாண்டி வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. படத்தின் ரத்தமாறே பாடல் வரிகளை கேட்கும் பொழுது ரஜினிக்கு மகன் மற்றும் பேரன் இருப்பது போல் கதை நகரும் என்ன ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தை ரிலீஸ்க்கு முன்பே பார்த்தவர்கள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது.
படம் ரிலீசுக்கு முன்பே படக்குழுவை தாண்டி முதலில் பார்ப்பவர்கள் சென்சார் போர்டு குழுவை சேர்ந்தவர்கள் தான். அப்படி ஜெயிலர் திரைப்படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் படம் நன்றாக வந்திருக்கிறது எனவும், மிகப்பெரிய வெற்றியை அடையும் எனவும் தங்களுடைய விமர்சனங்களை சொல்லி இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த முறை ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி சக்கை போடு போடப் போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளை பார்த்த குழுவினரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினி நடித்த தரமான படம் இது என சொல்லி இருக்கிறார்கள். ரஜினியின் கேரியரில் இந்த படம் கண்டிப்பாக முக்கியமான ஒரு அங்கமாக இடம்பெறும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. படத்தை பார்த்த இவர்களின் விமர்சனமே இந்த அளவுக்கு இருக்க, பட ரிலீஸ்க்கு பிறகு ரஜினி ரசிகர்கள் தலைகால் புரியாமல் ஆடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் இருவருக்குமே இந்த படம் ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். இதில் இவர்கள் இருவருமே ஜெயித்தே
தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்ப தற்போது விமர்சனங்களும் பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. மக்களின் விமர்சனமும் இன்னும் பத்து நாட்களில் தெரிந்துவிடும்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment