புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்திய புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023
அண்மையில் தீவகம் பொது விளையாட்டு மைதானத்தில் ( புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி ) நடைபெற்றது .
சாவகச்சேரி , நயினாதீவு புங்குடுதீவு , கடற்படை , வேலணை , புங்குடுதீவு ஐக்கியம் ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட குறித்த 15 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித்தொடரில் தொடரில் அரையிறுதிக்கு புங்குடுதீவு , சாவகச்சேரி , வேலணை மற்றும் கடற்படை ஆகிய அணிகள் தெரிவாகியிருந்தன . இறுதிப்போட்டியில் சாவகச்சேரி லவ்லி அணியும் புங்குடுதீவு அணியும் மோதிக்கொண்டன.
இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டித்தொடரில் வெற்றிபெற்ற சாவகச்சேரி அணிக்கு திரு திருமதி சதாசிவம் அன்னமுத்து தம்பதிகளின் நினைவாக ( புங்குடுதீவு 03 ம் வட்டாரம் ) ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத்தொகையும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதோடு இரண்டாமிடத்தை பெற்ற புங்குடுதீவு அணிக்கு ரூபாய் 25000 ரூபாயும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டன .
இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக அருண் ( புங்குடுதீவு ) தெரிவசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த வீரருக்கான பரிசை சாகித்தியன் ( சாவகச்சேரி ) தட்டிச்சென்றிருந்தார் .
புங்குடுதீவு ஐக்கியம் அணிக்கான சீருடையினை AK சுவிஸ் தமிழ் வானொலி ( AK swiss tamil media ) நிறுவனத்தின் சார்பில் ரா. கஜேந்திரன் ( புங்குடுதீவு 10 ம் வட்டாரம் ) வழங்கியிருந்தார் .
புங்குடுதீவு அணிக்கான சீருடையை யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள TK டிரான்ஸ்போர்ட் நிறுவனம் சார்பாக திலீப் அவர்கள் வழங்கியிருந்தார் .
மேற்படி போட்டி நிகழ்வுகளுக்கான நிதி அனுரசணையாளர்களாக புங்குடுதீவு உலகமையம் அமைப்பினர் , சூழகம் அமைப்பு , ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா , புங்குடுதீவு சுப்பிரமணியம் கருணாகரன் குடும்பத்தினர் , திரு. தவம் பாக்கியம் ( பிரான்ஸ் ) , திரு. சோம சச்சிதானந்தன் ( கனடா ) , திரு. பாக்கியநாதன் ஜெகநாத் ( கனடா ) , சாவகச்சேரி லவ்லி கிறீம் கவுஸ் உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றிய இணைப்பாளர் திரு. நா. அழகேசன் ஆகியோர் விளங்கியிருந்தனர் . ஊடக அனுசரணையாளராக சமூகம் மீடியா நிறுவத்தினர் செயற்பட்டிருந்தனர்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment