விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறுவதற்காக தான், இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

 


விஜய்க்கு சமீப காலமாகவே அரசியல் ஆசை வந்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது அரசியலுக்காக விஜய் போட்டிருக்கும் இரட்டை வேஷம் வெளிப்பட்டு விட்டது.
விஜய் தற்போது 234 தொகுதியில் உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய், ‘அம்பேத்கர், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்று அவர்களுக்கு ஒரு சில அறிவுரையை கூறினார். அதே சமயம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என சொல்லும் விஜய், தனது படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் விலை மட்டும் ஆயிரக்கணக்கில் விற்கப்படுவதை ஏன் தட்டிக் கேட்பதில்லை, கண்டுப்பதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரைப்படங்களை வெளியிட்டு ரூ.2000, ரூ. 1000 என ஒரு டிக்கெட்டின் விலையை தாறுமாறாக நிர்ணயித்து மக்களிடம் பணத்தை கொள்ளை அடிக்கும் போது, ஓட்டுக்கு மக்கள் காசு வாங்குவது மட்டும் தவறா என்பதுதான் கேள்வி. ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என சொன்ன விஜய், எதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை, எதற்கு இந்த இரட்டை வேடம்.

இன்று விஜய் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி செய்வதும் ஒருவித கண்துடைப்புதான். இப்போது விஜய் அரசியலுக்கு வருவதற்கான நகர்வு வேகம் எடுத்திருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு என்று புதிய வாக்காளர்கள் இருப்பார்கள். அவர்களை கவரும் யுக்திதான் இந்தப் பாராட்டு விழா.

இதையெல்லாம் பார்க்கும் போது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மக்களின் மீது தேர்தல் வரும் போது தான் அக்கறை எழும். அப்போதுதான் புது ரோடு போட்டு தருவார்கள், தண்ணீர் குழாய் அமைத்து தருவார்கள், சாக்கடையை சுத்தம் செய்வார்கள். இப்படி எல்லாம் செய்து அந்த சமயம் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுக்கொண்டு ஓட்டு போட்ட பிறகு திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

அதே போன்று தான் படம் வசூலை அள்ளும் வரை மக்களிடம் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி அதன் பின் படம் வசூலை அள்ளிய பிறகு மக்களை கண்டு கொள்ள மாட்டார்கள். கிட்டத்தட்ட சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றுதான். ஆகையால் விஜய் அரசியலுக்கு வருவதற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஏற்கனவே சினிமாவில் ஏகப்பட்ட விஷயத்தில் கைதேர்ந்தவர்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial