யார் இந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்

 



கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்

மனிதன் என்பவன் உணர்ச்சிகளின் தொகுப்புதான் என்று சொன்னால் அது மிகையில்லை.

எளிதில் உணர்சிவசபடுபவன்தான் மனிதன். ஆனாலும் ஒருவனை மிக எளிதில் அழவைத்து விடலாம். அது இலகு. அவனுக்கு சொந்தமானது ஒன்றை அவனிடம் இருந்து பறித்தாலே கூட போதும் அழுதுவிடுபவன்தான் மனிதன். ஆனால் அவனை அவ்வளவு எளிதில் சிரிக்க வைக்க முடியாது. எவ்வளவு பெரிய மதியூகமான நகைசுவையாக இருந்தாலும் கூட அது புரிந்தால்தான் சிரிப்பு வரும். இது கண்கூடு

அப்படி கடினமான இலக்கை தமிழ் திரையில் அனாயசமாக செய்தவர்கள் உண்டு அதில் மிக முதன்மையானவர் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்கிற என் எஸ் கிருஷ்ணன்

தமிழ் திரைப்படம் பேசும்படம் என்ற நிலையை அடையும் காலத்திலேயே திரையில் தோன்றியவர்.

நாகர்கோயில் அருகில் உள்ள ஒழுகினசேரி என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இயல்பில் ஒரு வில்லுப்பாட்டு கலைஞர்.

வில்லுப்பாட்டு என்பது பல திறனை உள்ளடக்கமாக கொண்டவர்களால்தான் சாத்தியம் கதை சொல்ல தெரியவேண்டும் . இசை ஞானம் வேண்டும். குரல்வளம் உச்சரிப்பு தெளிவு வேண்டும் போன்ற பல விஷயங்களை கொண்டது. இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்தான் பிரகாசிக்க முடியும்.

இதில் பயிற்சி பெற்று சிறந்து விளங்கிய என் எஸ் கே பின்னர் திரை யுலகில்நுழைந்தபோது இந்த திறன் வெகுவாக கைகொடுத்தது.

தனக்கென ஒரு நாடக குழுவை வைத்திருந்த இவர் தானே கதை எழுதி வசனம் எழுதி நடிக்கும் திறன் பெற்றவர். அதனால் படங்களில் இயல்பாக இவரால் பிரகாசிக்க முடிந்தது

இவர் நடித்த முதல் படம் வெளிவந்த ஆண்டு 1936 மேனகா அன்றைய நாடக உலகில் டி கே சண்முகம் சகோதரர்கள் நடித்த படம்.படங்களில் இவர் தனது நகைசுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதி நடிப்பார் என்பது தனிச்சிறப்பு . பெரும்பாலும் அறிவியல் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து தருவது இவரது வழக்கம்

நாம் பல பழக்கங்களை ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்கிறோம் என்பதை நகைச்சுவையின் மூலம் விளக்கி அதை எற்றுகொள்ளசெய்வது இவரது இலக்காக இருக்கும்

சிறந்த நடிப்பு, செறிவான கருத்து, அதை அழகாக சிரிக்க சிரிக்க சொல்ல தெரிந்த விதம் எல்லாம் சேர்ந்து இவரை வெகு சீக்கிரம் புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

படங்கள் இவரது நகைசுவைக்காக ஓட துவங்கியது

இவர் டி ஏ மதுரம் எனும் நடிகையை மணம் புரிந்து கொண்டார். மேலும் அன்று முதல் நகைச்சுவை ஜோடி என்று பெயர் பெற்றனர். இருவரும் சேர்ந்தே படங்களில் இணைந்து கலக்குவார்கள்

சமூக சீர்திருத்த கருத்துக்களை நகைச்சுவை காட்சிமூலம் விளக்குவார்.பல காட்சிகள் சுவாரசியமானது. இன்றும் யூடுப்பில் கொட்டி கிடக்கிறது நீங்கலள் பார்த்தல் புரிந்துகொள்வீர்கள. அவ்வளவும் யதார்த்தமாகவும் மனதை கொள்ளை கொள்பவையாக இருக்கும்

சார்லி சாப்ளின் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று இவரை புகழும் வண்ணம் அவருக்கு இணையான நகைச்சுவையை வெளிபடுத்துவார்.

எம்ஜியார் அறிமுகமான சதி லீலாவதி, அம்பிகாபதி , கிருஷ்ணன் தூது, பக்த துளசிதாஸ், மதுரைவீரன் ,உத்தம புத்திரன், சகுந்தலை, மங்கம்மா சபதம், சிவகவி போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகள் புகழ் பெற்றவை

இவர் திரைபடங்கள் இயக்கவும் செய்து இருக்கிறார்.

பணம், மணமகள் ஆகிய இருபடங்கள் இவர் இயக்கத்தில் மு கருணாநிதி வசனத்தில் வந்தது.

ஒருகருத்தை ஒருவரிடம் விதைக்க அதற்கு நகைச்சுவை சிறந்த ஊடகம் என்பதை இவர் தனது நடிப்பால் உணர்த்தியவர் இவர் பின்பற்றித்தான் விவேக் போன்றவர்கள் படத்தில் சீர்திருத்த கருத்துக்களை பிரசாரமாக இல்லாமல் மெல்லியதாக கூறினர்.

நூற்று அம்பது படங்கள் நடித்த இவர் தனது சக நடிகர்களான டி எஸ் துரைராஜ், புளிமூட்டை ராமசாமி, சி எஸ் பாண்டியன் போன்றறோருடனும், உடுமலை நாராயண கவி, சுப்பு ஆறுமுகம் போன்றவர்கள் கதைகளில் நடித்து படங்களை வெற்றி பெற செய்தார்.

சிறந்த பாடகரும் கூட திரைப்படத்தில்நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் வாழ்க்கை பல மேடுபள்ளங்களை கொண்டது . நடிப்பில் சிகரமான இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கி தண்டனை பெறுகிறார். மூன்று ஆண்டு சிறைவாசம் இவர் உடல்நலன் மன நலத்தை வெகுவாக பதிகிறது அதன் பிறகும் நடித்தாலும் முந்தைய உற்சாகம் இல்லாமல் போகிறது. மேலும் வழக்கிற்கு செலவு செய்ய வேண்டிவருவதால் தனது செல்வங்களை இழக்கிறார்.

இருப்பினும் வள்ளல் தன்மை கொண்டவர் தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவுபவர்.

அதுமட்டுமல்ல நகைச்சுவை பற்றிய இவரது கருத்து மிக உயர்வானது. மனிதன் விலங்குகளில் இருந்து உயர்ந்தவனாக கருதபடுவதே அவன் சிரிப்பால்தான் என்று கூறுவார். ஏனெனில் புலி மனிதனை விட அழகானது . குரங்கிற்கும் நடக்க தெரியும் குயிலுக்கு நம்மை கட்டிலும் அழகாக பாடகூடியது ஆனால் மனிதானால் மட்டுமே சிரிக்க முடியும் அதனால் அவன் சிறப்படைகிறான் என்று அதற்கு அழகான விளக்கும் கொடுப்பார்.

மகாத்மா காந்தி மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் மறைவிற்கு பின் தனது சொந்த செலவில் ஐம்பதாயிரம் ( அன்றைய மதிப்பில் மிகபெரிய தொகை ) கொடுத்து அவருக்கு சிலை நிறுவினார்.

தனது வறுமையின் போதும் பிறருக்கு உதவுவதைநிறுத்திக் கொள்ளவில்லை .இதனால் அவர் மேலும் மேலும் பொருளாதாரத்தில் பலவீனமானார்.

தனது நாற்பத்து ஒன்பதாவது வயதில் மஞ்சள் காமாலை வந்து குணமாகாமல் இறக்கிறார்.

இவரது மகன் என் எஸ் கே குமரன் நடிகர். பேரன் உடையலங்கார நிபுணர் . பேத்தி ரம்யா பின்னணி பாடகி ( பிக்பாஸ் இரண்டில் பங்கு பெற்றவர் )

இவரின் புகழை போற்றும் வண்ணம் இவருக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரசு கலையரங்கிற்கு கலைவாணர் அரங்கு என தமிழ் நாடு அரசால் பெயரிடப்பட்டுள்ளது

தமிழ் திரையுலகம் பெருமைபடதகுந்த கலைஞர்.





உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube








Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial