மறைமுகமாக மோடியின் நண்பருடன் அஜித் செய்திருக்கும் வேலை




 சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது தொட முடியாத அளவிற்கு உச்சத்தில் இருக்கும் அஜித், ஆரம்பத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். 

அவர் இப்படி செய்திருக்கிறாரா என ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாக செய்திருக்கும் வேலை தற்போது திரையுலகையே வியந்து பார்க்க வைக்கிறது.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஆக எம்ஜிஆர், சிவாஜி காலக்கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரபலமானவர்தான் நடிகர் ஜெய்சங்கர். இவருடைய மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ள நிலையில், இளையமகன் சஞ்சய் சங்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

விஜய் சங்கர் சினிமாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இலவசமாக சிகிச்சை செய்து வருகிறார். அது மட்டுமல்ல இவர் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு முகாம் மூலம் இலவச சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் இவருடைய மருத்துவமனைக்கு வருபவர்கள் மேல்சிகிச்சைக்காக பணம் இல்லை என திரும்பி சென்றால், அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே இலவசமாக சிகிச்சை அளிப்பாராம்.

இதை கேள்விப்பட்ட அஜித் இவரை சந்தித்து இவருடன் நண்பராக இருந்து வருகிறார் மற்றும் இவர் செய்யும் உதவிகளுக்கு அஜித் தனது பங்கிற்கு பண உதவிகளை கொடுத்து வருகிறார். எவ்வளவு பணமாக இருந்தாலும் உடனே கேளுங்கள் நான் செய்கிறேன் என்று அந்த வார்த்தையையும் அஜித் கூறி இருக்கிறார். மேலும் நடிகர் சோ தான் விஜய் சங்கரை மோடிக்கு அறிமுகப்படுத்தினார்.

இதனால் மோடிக்கும் விஜய் சங்கர் மிகவும் நெருக்கமானவர். மோடி சென்னை வந்தாலே இவரை கூப்பிட்டு சந்திக்கும் அளவிற்கு புகழ் பெற்றவர். காரணம் விஜய் சங்கர் செய்யும் உதவி அவருடன் அஜித்தும் சேர்ந்து பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் உதவிகளுக்கு பணம் கொடுத்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நிச்சயம் இந்த ஜென்மத்தில் அஜித் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இனிவரும் நாட்களில் அவரது முடிவு மாறலாம். மோடியின் நண்பரான விஜய் சங்கருடன் கைகோர்த்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை வழங்குவதற்காக கட்டு கட்டாக பணத்தை கணக்கு பார்க்காமல் கொடுக்கும் அஜித்தை பலரும் பாராட்டுகின்றனர்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial