எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் தொடர்ந்து நான்கு ஐந்து படங்கள் ஃபெயிலியர் ஆனதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
அந்த மாதிரி நேரத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல இயக்கங்கள் கிடைத்தால் நடிகர்களின் லெவல் வேற லெவல்ல மாறிவிடும். அப்படி சில நடிகர்கள் அடிப்பட்ட நேரத்தில் அவர்களை தூக்கி விட்ட 5 இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.
சூர்யா- சுதா கொங்கரா: பத்தில் ஒரு நடிகராக நடித்து வந்துகிட்டு இருந்தவர்தான் சூர்யா. எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல இமேஜ் இருந்திருந்தாலும் ஏதோ இவர் படத்தில் மிஸ் ஆனது போலையே இருக்கும். அதை தீர்த்து வைக்கும் விதமாக இவருக்கு தோள் கொடுத்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா.
இவர் சூர்யாவை வைத்து எடுத்த சூரரைப் போற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் தேசிய விருதையும் வாங்கும் அளவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறது.
விஜய்- ஏ ஆர் முருகதாஸ்: இவர் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஒரு பிளாக் பஸ்டர் படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வந்திருந்த நிலையில் இவருக்கு கிடைத்த இயக்குனர் தன் ஏ ஆர் முருகதாஸ். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படம் விஜய்க்கு சினிமா கேரியரை வேற லெவல்ல கொண்டு போய்விட்டது.
சிம்பு- வெங்கட் பிரபு: இனிமேல் சிம்பு அவ்வளவுதான் ஓரமா ஒதுங்கி விட்டார். சினிமாவையும் இத்துடன் மறந்திட வேண்டியதுதான் என்ற நிலைமையில் தள்ளப்பட்டவர் தான் சிம்பு.
அந்த சமயத்தில் யாரும் எதிர்பாக்காத விதமாக சிம்புவுக்கு வெங்கட் பிரபு கொடுத்த படம் தான் மாநாடு.
இப்படத்தை பார்க்கையில் வா தலைவா மறுபடியும் கம் பேக் கொடுக்கவா என்று ரசிகர்கள் கூச்சமிடும் அளவிற்கு இவருடைய என்டரி மரண மாஸாக இருந்தது.
\கமல்- லோகேஷ் கனகராஜ்: 80, 90களில் நடித்து வந்து தற்போது வரை முன்னணியில் இருந்தாலும் பெருசாக சொல்லும்படியான இந்த காலத்து ரசிகர்களை கவர்ந்து கொள்ள முடியாமல் ஏதோ படம் பண்ண வேண்டும் என்று ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான் தன்னுடைய குருவை இந்த மாதிரி ஒரு நிலைமையில் பார்க்கக்கூடாது என்று படை எடுத்து ராமனுக்கு எப்படி அனுமன் உதவி செஞ்சாரோ அது போல் கமலுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் தான் லோகேஷ். இவர் கொடுத்த விக்ரம் சினிமாவையே குலுக்கி புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அஜித்- வெங்கட் பிரபு: இவர் கிட்டத்தட்ட பல படங்களுக்கும் மேல் நடித்த நிலையில் அஜித்துக்கும் விஜய்க்கும் இடையான போட்டி நிலவிய சமயத்தில் நடித்த ஐந்து, ஆறு படங்கள் தொடர்ந்து ஃபெயிலியர் ஆனதால் ரொம்பவே துவண்டு போய்விட்டார்.
இந்நிலையில் இவரை தூக்கி விடும் விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தில் கச்சிதமாக வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் மூலம் தூக்கி விட்டார். இப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி ஒரு மாஸ் ஹீரோ என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.
Post a Comment