Home அன்னை போல் ஒரு உறவு இருக்குமா? byAK SWISS TAMIL MEDIA —5/15/2023 05:53:00 PM 0 அன்னை போல்ஒரு உறவு இருக்குமா?**************************உதிரம் தந்துஉயிரும் தந்துஉறவாக வாழும்உன்னதம் அன்னை.அப்பா வழிஅன்பை பெற்றுஅணைத்து எமக்குஅனுப்பிடும் ஆற்றல்.ஊரும் உறவும்ஊர்வலம் போலஊர்ந்து செல்லும்ஊமை வாழ்வில் நுட்பம் எல்லாம்நுணுக்கமாகத் தான்நுழைந்து ஊட்டும்நுண்ணறிவு அன்னை.தோற்று வீழும் போதுதோல்வி தழுவியும்தோசம் என ஒரு சாட்டால்தோல்வி மறைப்பாள்.மற்றவர் முன்னேமன்னவர் போலமண்ணாளும் மகவாகமணப்பார் என்பாள்.வாழும் காலம்வாழை போலவாசம் வீசும்வாஞ்சை தருவாள்.நஞ்சையும் அவள்நம்பிட நமக்கு நன்மை ஆக்கும்நல்வழி தந்திடுவாள்.ஏற்றம் ஒன்றை ஏராளமாக பெற்றிடஏற்றி வைப்பாள்ஏணிவிளக்கதை பார்......... அன்புடன் நதுநசி.
Post a Comment