இலங்கையில் கைது செய்யப்பட்டவர் சீனாவில் தேடப்படும் ஒருவர்

 



போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீன நபர் சீனாவில் தேடப்படும் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரை கைது செய்வதற்கான பிடியாணை சீன அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் திட்டமிட்டது.

இருப்பினும் இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் தலையீட்டைத் தொடர்ந்து அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள்அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

24 ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் , சீனப் பிரஜையின் வசம் இருந்த கினியா கடவுச்சீட்டு போலியானது என்பதை INTERPOL உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சீன கடவுச்சீட்டு உண்மையான ஆவணமே என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial