வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தரமான முதற்தர வானொலி கேட்க ஸ்கான் செய்யவும்
பீரியட் மூவியாக எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு தற்போது தென்காசியை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் தான் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது மத்தளம் பாறை கிராமத்திற்கு அருகே படப்பிடிப்பை நடத்தி வந்த பட குழுவினருக்கு அங்கு சூட்டிங் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார்.
ஏற்கனவே வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் லைட்டுகள் போன்றவற்றால் தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அதைத்தொடர்ந்து பட குழுவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பட குழுவினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் மத்தளம் பாறை பகுதியில் சூட்டிங் நடத்தி இருக்கின்றனர். இது குறித்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் அதிரடியாக படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லி இருக்கிறார்.
அதையொட்டி ஷூட்டிங் இப்போது இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தள்ளி போய் இருக்கிறது. இந்த விவகாரம் தான் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷ் படத்திற்கு கணக்கிட முடியாத அளவுக்கு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
அதில் தற்போது புது சிக்கலும் முளைத்திருப்பது அவரை கடும் அப்செட்டாக்கி இருக்கிறதாம். ஏனென்றால் இப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட பட குழு தயாராகி வரும் நிலையில் இந்தப் பிரச்சனை அவர்களை சோர்வடைய வைத்திருக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment