விக்ரம் நடித்து வெளிவந்த படங்கள் சமீப காலமாகவே படு தோல்வியை அடைந்து இவரை ஒரு படி பின்னுக்குத் தள்ளி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும் விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்கள் வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் போராடி வருகிறார்.
ஒரு நேரத்தில் இவரது படங்கள் என்றால் கேரக்டருக்கு ஏற்றபடி இவருடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஆழமான நடிப்பை வெளிக்காட்டுவதில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது என்று பெயர் வாங்கியவர்.
அப்படிப்பட்ட இவர் பல வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலே வர வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் இணைந்திருக்கிறார்.
இது குறித்து வெளிவந்த விக்ரம் போட்டோக்களை பார்த்தாலே இது மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று தோன்றும் அளவிற்கு இருக்கிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை ஆனது கோலார் தங்க வயல்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தை மிகவும் நம்பி இருக்கிறார்.
இந்த படமும் வெற்றி பெறாவிட்டால் அடுத்து கண்டிப்பாக எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்து அதிகளவில் மெனக்கெடு செய்து வருகிறார்.
தற்போது இப்படம் 85 சதவீத படப்பிடிப்புக்கு மேல் முடிவடைந்துள்ளது. அதனால் இப்படத்தை இந்த வருட இறுதியில் வெளியிட முடிவு எடுத்திருக்கிறார்கள்.
மேலும் அதே நேரத்தில் தான் இந்தியன் 2 படமும் ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இதை பார்க்கும் பொழுது கமல் படமான இந்தியன் 2 படத்துடன் மோதுவதற்கு துணிந்து இருக்கிறார் என்று தெரிகிறது.
அப்போதுதான் விக்ரம் படம் பெரிய அளவில் பேசப்படும். அதே நேரத்தில் இந்தியன் 2 மிக பிரம்மாண்டமான கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே மாதிரி தங்கலான் படத்திலும் விக்ரமனின் நடிப்பை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் சேர்த்து வெளியிட்டால் அப்போது விக்ரம் மார்க்கெட் உயர வாய்ப்பு இருக்கிறது என்று கடைசி ஆயுதமாக இவருடைய பலத்தை நிரூபிக்க இருக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Nice vikram
ReplyDeletegood jop
ReplyDeletegood news
ReplyDeletePost a Comment