உலகப்பணக்காரர்களில் ஒருவரான அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்திருக்கிறார். எதற்காகத் தெரியுமா?
உலகப் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.7 லட்சம் கோடி.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம், ரீடெய்ல் என பல துறைகளில் தனக்கென ஒரு ஆட்சியை செய்து வருகிறார்.
உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி, தனது நிறுவன ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட சொகுசு வீட்டை பரிசாக அளித்துள்ளார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ஊழியர்களுக்கு போனஸ்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் முகேஷ் அம்பானி இவ்வளவு பெரிய தொகைக்கு வீடு வாங்கியுள்ளார் என்ற செய்தி பலரையும் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தால் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் மனோஜ் மோடி. அவர் மிகவும் எளிமையானவர் என்றாலும், மனோஜ் மோடி ஒரு கடினமான பேச்சுவார்த்தையாளர்.
தரமான முதற்தர வானொலி கேட்க ஸ்கான் செய்யவும்
இவர் தான் அம்பானிக்கு வலதுகரம். இவரும் அம்பானியும் மும்பையில் வேதியியல் தொழிநுட்பத்துறையை ஒன்றாகப் படித்தவர்.
மேலும் முகேஷ் அம்பானியின் தந்தை இருக்கும் போதே ரிலையன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தினார். அதுமட்டுமில்லாமல் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் பல தசாப்தங்களாக நண்பராக இருக்கிறார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானி மனோஜ் மோடிக்கு 1.500 கோடி மதிப்பிலான வீட்டைக் கொடுத்திருக்கிறார். இந்த வீட்டை தலதி மற்றும் பார்ட்னர்ஸ் எல்எல்பி வடிவமைத்துள்ளது, மேலும் சில வீட்டு தளபாடங்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment