நடிகை டாப்ஸி தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பின்னர் ஆடுகளம், காஞ்சனா, வந்தான் வென்றான் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
டாப்ஸி தற்போது பெரும்பாலும் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.
தற்போது இவர் கைவசம் வோ லட்கி ஹை கஹான், டங்கி, ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா என்னும் மூன்று ஹிந்தி திரைப்படங்கள் இருக்கின்றன. மேலும் தமிழில் ஜன கன மன திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
நடிகைகள் தற்போது தங்களுடைய டயட் மற்றும் ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. அவரைப் போன்றே டாப் செய்யும் தன்னுடைய ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்துகிறார். இதைப் பற்றி அவரே நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
அவருடைய பேட்டி ஒன்றில், சினிமாவை சார்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக பல இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கே கிடைக்கும் உணவுகளை உண்ண வேண்டி வருகிறது.
அதன் தாக்கம் ஐந்து, ஆறு வருடங்களிலேயே உடம்பில் காட்டுகிறது. நான் என்னுடைய ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னுடைய டயட்டீசனுக்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
சமீபத்தில் கடின உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் டாப்ஸி ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்திற்கு கீழே தன்னுடைய ஜிம் பயிற்சியாளருக்கு நன்றி சொல்லி இனி நான் எனக்கு பிடித்த பூரியையும், ரொட்டியையும் சாப்பிடுவேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment