சூடானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து கவனம் செலுத்துகின்றோம்.
தரமான முதற்தர வானொலி கேட்க ஸ்கான் செய்யவும்
வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! முடிவை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்
சூடானில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வு. சூடான் மக்களிற்கு அமைதி சமாதானம் ஸ்திரதன்மை முன்னேற்றம் போன்றவை கிட்ட வேண்டும்.
மேலும் இந்த விடயத்தில் இந்தியா வழங்கிய உதவிகளை பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment