கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய்க்கு என்று தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இதனால் தளபதி அரசியலுக்கு வரவேண்டும் என அவர்கள் நீண்ட நாட்களாக விரும்புகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக தான் தற்போது விஜய் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஓபன் செய்து இருக்கிறார்.
அதாவது விஜய்யின் மேனேஜர் ஆன ஜெகதீஷ் தான் தளபதியின் ட்விட்டர், இன்ஸ்ட்ரா உள்ள சமூக வலைதளங்களை பார்த்துக் கொள்கிறார் .
அவர்தான் விஜய்யின் ட்விட்டர் அக்கவுண்டிங் அட்மின் ஆகவும் உள்ளார்.
எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்குப் போக வேண்டும் என்றால் சோசியல் மீடியா முக்கியமாக இருக்கும். அதனால் இளைஞர்களை குறி வைத்து இப்போது இன்ஸ்டாகிராமிலும் அக்கவுண்ட் வேண்டும் என விஜய்க்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.
அதனால் தான் விஜய்யும் சரியான நேரத்தில் ஐடி ஓபன் செய்துள்ளார். மேலும் விஜய்யின் மக்கள் இயக்கம் துவங்கும் போது அந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும் கலந்து கொண்டார்.
அதனால் எதிர்காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் தளபதி விஜய் இருவரும் இணைந்து அரசியலில் பயணிக்கலாம் எனவும் பேசப்பட்டது. ஆனால் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.
இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விஜய் அரசியலில் குதிக்கும் போது அவருடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்ல விஜய் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அல்லது 2026ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் களம் இறங்கலாம் எனவும் நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
இதற்காகத்தான் முன்கூட்டியே தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களின் மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் விஜய்யின் முதல் இலக்கு இளைஞர்கள் தான். அதனை நிரூபிக்கும் வகையில் விஜய் இப்போது இன்ஸ்டாகிராமில் இணைந்த 20 நிமிடங்களில் ஒரு லட்சம் பேர் ஃபாலோ செய்ய தொடங்கினர். அதன் பிறகு 99 நிமிடத்தில் 10 லட்சம் ஆக உயர்ந்தது.
இதுவரை மொத்தமாக 6.4 மில்லியன் பேர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் அரசியலில் களமிறங்கப் போகும் விஜய்யால் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் நிலவ வாய்ப்பு இருக்கிறது. அந்த மாற்றத்தை பார்ப்பதற்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment