வீட்டில் நடந்த சோகத்தால் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு வந்த அஜித்




அஜித்தின் துணிவு வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்தார். 

அங்கு கடற்கரையில் அஜித், ஷாலினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இப்போது 

குடும்பத்தில் ஏற்பட்ட மரண செய்தியால் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு விரைந்து உள்ளார் அஜித். அதாவது அஜித்தின் தந்தை பி சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பி சுப்பிரமணியனுக்கு மோகினி என்ற மனைவி உள்ளார். 

மேலும் அனில் குமார், அனூப் குமார், அஜித்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். அஜித் சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

இதற்கு அவரது தந்தையின் உந்துதலும் காரணம். அஜித்தின் ஒவ்வொரு கஷ்டமான சூழலிலும் அவருக்கு உத்வேகம் கொடுத்த தந்தை இப்போது அவருடன் இல்லை. அவரின் மரணத்தால் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ள அஜித்துக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மேலும் அஜித்தின் தந்தை பி சுப்பிரமணியன் உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் காலை 10 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. 

சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் தந்தைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial