இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத கனவு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுகிறார்.
இவற்றில் பல ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும், ஆழமான பொருளாதார பகுப்பாய்வு மூலம் சாதிப்பது மிகவும் கடினம் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கருத்திற்கமைய, இலங்கை மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டளவில் தனது இருப்புக்களை 10.9 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குள் மத்திய வங்கியின் கையிருப்பு அளவு 1.9 பில்லியன் டொலர்களாகும். அதைக் கருத்தில் கொண்டு மூன்று வருடங்களில் இந்த அளவு கையிருப்பை அதிகரிக்கக்கூடிய பொருளாதார பலம் இலங்கைக்கு இல்லை.
இலங்கையின் பொருளாதாரம் வலுவிழந்ததே இதற்குக் காரணம் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் மொத்த வரவு செலவுத் திட்டம் அல்லது கடன் கொடுப்பனவுகள் 15.9 வீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்துகிறது.
நிதியத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஓரளவுக்கு நிறைவேற்ற, இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழித்து, அரச நிறுவனங்களின் செயல்திறனை உடனடியாக அதிகரிக்கவும், நிறுவனங்களின் உற்பத்தித் திறனைக் கணிசமான அளவில் அதிகரிக்கவும் அரசாங்கம் உடனடியாகத் திட்டமிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment