சமீப காலமாகவே விஜய் பற்றிய செய்திகள் தான் மீடியாவில் அதிகமாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் அவர் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.
அதில் தற்போது சில மீடியாக்கள் இவரை மோசமாக விமர்சித்து கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
அதாவது சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் நம் தென்னிந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டி தூக்கியது.
அதேபோன்று தமிழ்நாட்டின் முதுமலையில் எடுக்கப்பட்ட குறும்படமும் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
அதை ஒட்டுமொத்த திரையுலகமும் தற்போது பெருமையுடன் கொண்டாடி வருகிறது.
மேலும் அனைத்து நடிகர், நடிகைகளும் படகுழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய் மட்டும் இது குறித்து எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
இதுதான் தற்போது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
மேலும் தெலுங்கு மீடியாக்கள் தான் இது குறித்து காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் சமீபத்தில் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டணியில் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் அக்கட தேசத்தில் தன்னுடைய மார்க்கெட் உயர வேண்டும் என்றும் தன் படங்களுக்கு அங்கு நல்ல வசூல் கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
அதனாலேயே அவர் தெலுங்கு திரை உலகில் சற்று அதிக கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தெலுங்கு திரைப்படம் ஆஸ்கர் விருதை வாங்கி இருக்கிறது. அதை அனைவரும் கொண்டாடும் போது விஜய் மட்டும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மேலும் ஒரு தெலுங்கு படம் இப்படி ஒரு உயர்ந்த விருதை வாங்கி இருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா, நாங்கள் கொடுக்கும் காசு புகழ் மட்டும் வேணுமா என மீடியாக்கள் இது குறித்து கேள்வி கேட்டு கொந்தளித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படம் ஆஸ்கார் வென்றது விஜய்க்கு பொறாமையாக இருக்கிறதா என்ற ரீதியிலும் அவர்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment