கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி படத்தை தொடர்ந்து பிரதீப் கடந்த வருடம் இயக்கி நடித்து வெளிவந்த லவ் டுடே சூப்பர் ஹிட் படமாக ஆனது.
மேலும் இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை கொடுத்து வசூலில் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதையும் கொள்ளையடிக்கப்பட்டது.
அதனால் தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இந்த படம் தமிழில் பெருத்த லாபத்தை கொடுத்தது போல ஹிந்திலும் வசூல் ஆகுமா என்று தெரியவில்லை.
அதனால் இதில் நடிப்பதற்கு பெரிய ஜாம்பவான்களின் வாரிசுகளை நடிக்க வைக்க இருக்கிறார். இதில் யார் நடிக்கப் போகிறார் என்றால் ஸ்ரீ தேவியின் இளைய மகளான குஷி கபூர் நடிக்க இருக்கிறார்.
அத்துடன் இவருக்கு ஜோடியாக அமீர்கானின் மகன் ஜுனைட் கான் நடிக்கப் போகிறார்.
ஆனால் தமிழில் இந்த கதாபாத்திரத்துக்கு சரியான ஆளு பிரதீப் ரங்கநாதன் தான் என்று சொல்லும் படியாக எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் இதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுத்து வெற்றியை பெற்றிருக்கிறார்.
இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட் காதலர்களுக்கு இடையே செல்போனை மாற்றிக் கொள்வதுதான். இதை பார்த்த பிறகு நிஜத்திலும் இந்த மாதிரி செய்து பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கான்செப்ட் அங்கே பொருந்துமா என்று தெரியவில்லை ஆனாலும் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வர இருக்கிறார்.
இவர் தமிழில் நடித்ததை போல் வேறு யாரும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பிரதீப் மேல் இருக்கும் நம்பிக்கையாலும், தமிழில் கிடைத்த வெற்றியைப் பார்த்த வாரிசு நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அங்கே அமோகமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள்.
மேலும் பிரதீப் நினைத்தபடி லவ் டுடே படத்தை அங்கே ரிலீஸ் செய்து அதிலும் வெற்றி பெற்றார் என்றால் இவருடைய மவுஸ் அதிக அளவில் உயர்ந்து வெற்றி இயக்குனர் என்று பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அத்துடன் பாலிவுட்டில் ஜாம்பவான்களின் வாரிசுகள் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment