வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 5 படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது. ஆனால் அன்றைய தினத்தில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிச்சைக்காரன் 2 படத்தை மட்டும் விஜய் ஆண்டனி டீலில் விட்டு விட்டார்.
சொப்பன சுந்தரி: எஸ்ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். கதாநாயகியின் கதாபாத்திரம் வலுவாக பேசக்கூடிய இந்த படம் சிறந்த காமெடி ஜோனரில் உருவாகி உள்ளது.
சாகுந்தலம்: சமந்தா நடிப்பில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் இதிகாச பின்னணியிலான சாகுந்தலம் திரைப்படம், ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த படம். இந்த படத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே திரையிட திட்டமிட்ட நிலையில், 3டி பதிப்புக்காக காலதாமதம் ஏற்பட்டு 2 முறை ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், படம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகிறது.
ருத்ரன்: பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்த கதிரேசன் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படம் தான் ருத்ரன். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இவருடன் சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.
சலார்: கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் சலார். இதில் ஸ்ருதிஹாசன் பிரபாஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியான தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.
இளமை எனும் பூங்காற்று: இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் சக்தி வேல்முருகன், பிரணவ் அப்துல்சலாம், நிதின் முரளிதரன்உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஆன தமிழ் புத்தாண்டில் மட்டும் 5 படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இதனால் பிச்சைக்காரன் 2 படத்தை மே 12க்கு ஒத்தி வைத்துவிட்டார் விஜய் ஆண்டனி. ஏனென்றால் இந்த 5 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அன்றைய தினத்தில் போட்டி அதிகமாக இருக்கும் என்ற ஒரு எண்ணத்தில் இப்படி செய்து விட்டார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment