மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
’வி ஹவுஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தொடர்ந்த வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட, எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனத்துடன் ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த தொகையில் ரூ.27 லட்சத்தையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில்,
பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிடக் கூடாது. அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment