ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக அறிவித்த உக்ரைன் ஆயுதப்படை


 

உக்ரைனுடனான போர் தாக்குதலில் ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஒட்டுமொத்த ரஷ்யாவும், ஜனாதிபதி புடினும் தயாராக இருப்பதாக மாஸ்கோ  அறிவித்து வருகிறது.


இருப்பினும், ஜனாதிபதி புடின் ஆட்சியில் இருக்கும் வரை உக்ரைன் பேச்சுவார்த்தை மேசையில் ரஷ்யாவுடன் உட்காராது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தீவிரமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனுடனான போர் தாக்குதலில் இதுவரை ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது


https://twitter.com/DefenceU/status/1594283957306138625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594283957306138625%7Ctwgr%5E91fb00cd6ae019bd778c28f5bd3cbfe6a24b0960%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Frussia-lost-84-210-troops-to-date-says-ukraine-1668983321

உக்ரைன் மதிப்பீடுகளின் படி சுமார் 330 ரஷ்ய வீரர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களில் ரஷ்யா 1 டாங்கி, 1 தந்திரோபாய-நிலை ஆளில்லா வான்வழி வாகனம், 3 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள், 2 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 1 பீரங்கி அமைப்பு போன்றவற்றை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க


24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com  உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி  நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv






Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial