#இலங்கை_அணி_வீரர்களை_எப்படி_தெரிவுசெய்கிறது?
இன்று இலங்கை அணியின் மாத்திரமல்ல இலங்கை நாட்டின் மானம் எவ்வளவு தூரம் கப்பலேறியது என்று சமூக ஊடகங்களையும் சர்வதேச ஊடகங்களையும் பார்த்தால் தெரியும். இவர்களது செயல் இன்று மட்டுமல்ல ஏற்கனவே நடந்ததும் அதனை அப்படியே மூடி மறைத்த வரலாறும் உண்டு. ஒரு சிறிய ஒப்பீடு. ஒவ்வொரு நாடும் தனது நாட்டுக்கு தேவையான விளையாட்டு வீரர்களை திறமை அடிப்படையில் தெரிவு செய்கிறது. இனம், மதம், மொழி, நிறம், தோற்றம், குடும்ப பிண்ணனி, வசதிவாய்ப்பு கல்வி, கற்ற பாடசாலை போன்ற எதனையும் பார்ப்பதில்லை. இன்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய மூன்று முக்கிய நெதர்லாந்து வீரர்கள் தான் வெற்றிக்கு காரணம். அவர்கள் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள். அவர்களது திறமையை நெதர்லாந்து பயன்படுத்தியது. வென்றது. இதில் வேறு நாட்டுக்காரன் என்று பார்க்கவில்லை.
பாக்கிஸ்தான் வீரர் சஹீன்ஷா அப்ரிடி ஒரு மலைக்கிராமத்தை சேர்ந்த வீரர். அவரது கிராமத்தில் விளையாடிய விதம் அவரை தேசிய அணியில் இடம்பெறச்செய்தது. அதே அணியின் ரிஸ்வான் ஒரு சாதாரண ஏழைத் தொழிலாளியின் மகன். இன்று உலகின் தலைசிறந்த வீரர். ஆனால் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகனுக்கு இன்னும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது அரசியல் பின்புலம் பக்காவாக இருந்தும் கிடைக்கவில்லை. காரணம் அவர் இன்னும் அந்தளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி கூட திறமையையே முன்னுரிமைப் படுத்துகிறது. இங்கிலாந்து அணியை மொயின் அலி என்ற வீரரை நம்பி ஒப்படைத்து பாக்கிஸ்தான் அனுப்பி கிண்ணம் வெல்ல வைத்தது அந்த நாடு. அங்கு இனம் பார்ப்பதில்லை. அவர்கள் எங்கு திறமையான வீரர்களை கண்டாலும் அவர்களை அப்படியே பிக்கப் பன்னுகிறார்கள்.
ஆனால் இலங்கையில்??????????
1. கொழும்பில் உள்ள மிகப்பெரிய பாடசாலைகளில் படித்தவராக இருக்க வேண்டும்.
2. சிங்களவராக இருக்க வேண்டும்.
3. பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்.
4. அரசியல்வாதியின் உறவினராக அல்லது ஆதரவு உள்ளவனாக இருக்க வேண்டும்.
5. மேல் மாகாணத்துக்கு வெளியில் இருப்பவர்கள் கூடாது.
6. தமிழ் முஸ்லிம் வீரர்கள் கூடாது.
7. தேரர்களின் ஆசி பெற்றவர்கள் மற்றும் ஆதரவு பெற்றவர்கள் மாத்திரம் வேண்டும்.
8. எந்தவித ஒழுக்க பிண்ணனியும் பார்க்கப்படாது.
போன்ற பல காரணங்கள் அடிப்படையில் தான்...
இது போன்ற காரணங்கள் தான் தாய் நாடு என்றாலும் ஆதரவு அளிக்க மனம் மறுப்பது.
Post a Comment