தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஆக்டராக இருக்கும் யோகி பாபு இந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக மாறியிருப்பவர் யோகி பாபு. பாபு என்ற பெயர் கொண்ட இவர், கடந்த 2009-ல் வெளியான அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் அறிமுகமானார்.
அது முதற்கொண்டு இவர் யோகி பாபு என அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கால்ஷீட் எளிதாக கிடைத்து விடலாம், ஆனால் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், கடந்த 10 மாதத்தில் மட்டும் யோகி பாபு நடித்த 17 படங்கள் வெளிவந்துள்ளன.
விஜய்யின் வாரிசு படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ளார். பீஸ்ட் படத்தில் இருவரின் காமெடி ஒர்க் அவுட் ஆன நிலையில், வாரிசு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Post a Comment