தேசிய விருதுக்கு தயாராகும் வடிவேலு..

 


நகைச்சுவை மன்னனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் வடிவேலு சில வருடங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். 

தற்போது அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு அவர் ஹீரோ, காமெடி மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே அவர் சில திரைப்படங்களில் கேரக்டர் ரோல் செய்திருந்தாலும் தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறாராம். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. 

முழுக்க முழுக்க அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் வடிவேலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

வழக்கம் போல காமெடி இருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் வடிவேலு வெளுத்து வாங்கி இருக்கிறாராம். இதைப்பற்றி தான் தற்போது திரை உலகில் ஒரு பேச்சாக இருக்கிறது. மேலும் உதயநிதி சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றிருந்தபோது அங்கு இருந்த அனைவரும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி தான் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது அவர் படத்தைப் பற்றி பேசியதை விட வடிவேலுவை பற்றி தான் வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். 

இந்த படத்தில் வடிவேலு அண்ணன் வேற லெவல் நடிப்பை கொடுத்திருப்பதாகவும், நிச்சயம் அந்த கேரக்டருக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் சிலாகித்து பேசி இருக்கிறார். 

இதனால் படத்தின் மீதான ஆர்வமும் தற்போது அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் வடிவேலும் இடையில் சில பல பிரச்சனைகளின் காரணமாக நடிகை விட்டு ஒதுங்கி இருந்தார். 

தற்போது புது தெம்புடன் மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவருக்கு இந்த மாமன்னன் திரைப்படம் நிச்சயம் பல விருதுகளை மட்டுமல்லாமல் ஒரு நல்ல கம்பேக்கையும் கொடுக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த படத்தைத் தவிர தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துவரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் வடிவேலு நடித்துக் கொண்டிருக்கிறார். 

மேலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

அந்த வகையில் வடிவேலு மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு பிசியான நடிகராக மாறி இருக்கிறார்.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com  உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி  நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial