ரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த 4ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.
மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கொஞ்சம் கூட Lag இல்லாமல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது என்பது தான் அனைவரின் பொதுவான விமர்சனமாக இருக்கிறது.
இரண்டே நாள் வசூல்
முதல் நாளே வசூலை அள்ளிய இப்படம், இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 7.5 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இரண்டு நாட்களில் பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களுக்கே கிடைக்காத வரவேற்பு லவ் டுடே படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment