நடிப்பு என்று வந்துவிட்டால் சில பிரபலங்கள் அப்படியே மாறிவிடுவார்கள், எல்லா விஷயத்தையும் சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அப்படிபட்ட கலைஞர்களில் ஒருவர் தான் நடிகை சமந்தா.
கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் நேரத்திலும் தான் நடித்துள்ள யசோதா படத்திற்காக புரொமோஷன் செய்துள்ளார்.
அப்படத்திற்காக சமந்தா கொடுத்த பேட்டி ரசிகர்களிடம் மிகவும் வைரலானது.
ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நாளை நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா என பலர் நடித்துள்ளார்கள்.
நாளை யசோதா படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகை சமந்தா புதிய புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், ரொம்ப பதட்டமாக உணர்கிறேன் அதேவேளையில் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான்.
நல்ல மகிழ்வோடு என் இயக்குனர், தயாரிப்பாளர் & படக்குழு அனைவரும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் என சமந்தா பதிவிட்டுள்ளார்.
Post a Comment