கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர் ‼️
306 புலம்பெயர்ந்தோருடன் மூழ்கிய படகை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பதிலளித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.‼️
கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா, தெரிவிக்கையில்
படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்தார்.
பின்னர் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.
கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே கடற்படைக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும் என்றும், அவர்கள் அனைவரும் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் அவர்களின் அடையாளம் கண்டறியப்படும் என்றும் டி சில்வா மேலும் கூறினார்.
Post a Comment