கர்நாடகா மாநிலம் மைசூரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பாய்ந்து தாக்கியது. இதில் அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து காயமடைந்தார்.
இதுதவிர வனத்துறையினர் உள்பட பொதுமக்கள் பலரையும் சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்த சம்பவம் காட்டுத்தீ போல் வேகமாக அந்த பகுதியில் பரவியது. இதனால் ஏராளமானவர்கள் வீட்டு மாடிகளில் நின்று கூச்சலிட்டனர்.
சிறுத்தையும் பல வீடுகளை தாண்டி வேகமாக ஓடியது. சாலையில் சென்றவர்கள் சிறுத்தையை பார்த்து ஓடினர். அவர்களை விரட்டி விரட்டி சிறுத்தை தாக்கியது.
இதுதொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.
Post a Comment