வாடகை தாய் பற்றிய முக்கிய கதை கருவை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸும் பலரையும் வாயடைக்க செய்திருக்கிறது.
அதாவது இந்த படம் ரிலீசுக்கு முன்பே கிட்டத்தட்ட 53 கோடிகள் வரை பிசினஸ் ஆகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
அதைத்தொடர்ந்து படத்தின் சாட்டிலைட் உரிமையும் 13 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் ஹிந்தியில் 3.5 கோடி ரூபாயும், தியேட்டர் உரிமை கிட்டத்தட்ட 10 கோடிக்கும் பிசினஸ் ஆகி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் இப்பவே 53 கோடிகளை வாரி சுருட்டி இருக்கிறது.
ரிலீசுக்கு முன்பே இப்படி என்றால் படம் வெளியாகி நிச்சயம் நல்ல வசூலை பெறும் என்று பட குழுவினர் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் சமந்தா தற்போது மையோசிடிஸ் என்னும் உடல்நல பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் இவர் யசோதா பட ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மருத்துவமனையில் இருந்தபடியே நன்றி தெரிவித்து ட்வீட் போட்டு இருந்தார்.
மேலும் சமந்தா சிகிச்சையில் இருப்பதால் இந்த படத்தின் பிரமோஷனுக்கு வரமாட்டார் என்றும் ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய உடல்நல பிரச்சனையை கூட பொருட்படுத்தாமல் சமந்தா சில தினங்களுக்கு முன்பு இந்த பட ப்ரமோஷனுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அவர் படத்தைப் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் யசோதா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் என்பதை பற்றியும் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பெரிதும் ஆதரவு கொடுத்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்நிலையில் படத்தின் பிசினஸும் நன்றாக இருப்பதால் ரசிகர்கள் பட ரிலீஸ் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Post a Comment