லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இதை தொடர்ந்து லோகேஷின் அடுத்த படமான விக்ரம் படஅதனால் லோகேஷ் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக விஜயின் தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத், விஷால் போன்றோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தை எடுக்கவிருக்கிறார்.
விக்ரம் படத்தில் கைதியின் தொடர்ச்சியாக சில கதாபாத்திரங்கள் இருந்தது. நரேன் இந்த படத்தில் கைதி கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார்.
மேலும் குரல் வாயிலாக கார்த்தியும் விக்ரம் படத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார்.
இப்போது விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக தான் கைதி 2 படமும் எடுக்கப்பட உள்ளது.
மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கார்த்தியை தேடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆகையால் கைதி 2 படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
மேலும் கைதி 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக தற்போது போதை பொருள் கடத்தல் அடியாளாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இது தவிர கைவசம் 6 முதல் 7 படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் கைதி 2 படத்திலும் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் தான் முதலில் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment