மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பையும், வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று தந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
அந்த வேலைகளில் தற்போது மணிரத்னம் படு பிஸியாக உள்ளார். இதைத்தொடர்ந்து ரஜினியின் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று உலக நாயகனுடன் இணையும் அறிவிப்பை மணிரத்தினம் வெளியிட்டார்.
நாயகன் படத்திற்குப் பின், அதாவது கிட்டத்தட்ட 35 வருடங்கள் பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் மணிரத்தினம், கமல் கூட்டணி இணைய உள்ளது.
இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமலின் ராஜ் கமல் என்டர்டைன்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவிருக்கிறது.
மேலும் இந்த படம் 2024 இல் வெளியாக உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் பொன்னியின் செல்வன் படத்தைப் போல இந்த படத்தையும் இரண்டு பாகங்களாக எடுக்க மணிரத்தினம் திட்டம் தீட்டி உள்ளாராம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிப்பது போல பிளான் செய்து உள்ளார்.
அதாவது படத்திற்கான ஒரே பட்ஜெட்டில் இரண்டு பாகங்களையும் எடுத்து வெளியிடலாம் என்ற யோசனையில் மணிரத்னம் உள்ளாராம்.
ஏனென்றால் ஒரே பாகமாக வெளியிட்டால் மொத்த வசூலையும் அள்ள முடியாது. அதுமட்டுமின்றி இப்போது கமலின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
ஆகையால் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் நல்ல கல்லா கட்டலாம் என்ற யோசனையில் மணிரத்தினம் உள்ளாராம். இதுகுறித்து படக்குழு விடமும் மணிரத்னம் பேசி உள்ளாராம்.
இது தான் கண்டிப்பாக நடக்கும் என பலரும் கூறுகிறார்கள். எனவே கமலின் படம் இரண்டு பாகங்களாக உருவாவது உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment