தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, கனா, த/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர், 2017 ஆம் ஆண்டு, டாடி என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லுடோக், ஜக்கா ஹாசூஸ்க் ஆகிய படங்களின் காதாசிரியர் சாம்ராட் சக்ரவர்த்தி. இவர், மாணிக் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
த்ரில்லர் பட பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.
இப்படம் இம்மாதக் கடைசியில் தொடங்கி, 2023 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Post a Comment