தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மெலும் ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.
ஆந்திராவில் தற்போது ஆட்சி அமைத்துள்ள YSR காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சி நடத்தி வருகின்றது.
இதில் ரோஜாவும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ரோஜா- செல்வமணி தம்பதிகளின் மகள் அன்ஷு மல்லிகா, ஒரு தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதுபற்றி பேசியுள்ள ரோஜா “என் மகளோ மகனோ சினிமாவுக்கு வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் என் மகள் விஞ்ஞானி ஆக விரும்புகிறாள். அவள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அவளுக்கு என் ஆதரவு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment