காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி காவல்நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நாயால் கைதி ஒருவருக்கு பிணை வழங்கபட்டுள்ளது.
இந்த சம்பவம் களுத்துறை புளத்சிங்கள காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
காவல்சிறைக்கூண்டிற்கு அருகில் நாய் ஒன்று நிற்பதை கண்ட காவல்துறையினர் அதனை விரட்டியுள்ளனர். இருப்பினும் அந்த நாய் வெளியே செல்லாமல் காவல்நிலையத்தில் பதுங்கியிருந்து
இதனை கண்ட காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் வளர்த்த நாய் என தெரியவந்துள்ளது.
மேலும் , புளத்சிங்கள பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்து ஜீப்பின் பின்னால் அந்த நாயும் வந்துள்ளது. பின்னர் அந்த நாய் இரும்பு கம்பிகள் வழியாக எஜமானைப் பார்த்துக்கொண்டு இருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment