நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் லத்தி. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திகதி யில் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் இப்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை நயன் தாரா நடித்துள்ள படம் கனெக்ட். இப்படத்தில் அனுபம் கேர், சத்ய ராஜ் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் நடித்துள்ளனர்.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் திகதி கிருஸ்துமஸ் பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, அறிவித்துள்ளது.
இதனால், விஷாலுடன் முதன்முறையாக நயன் தாராவின் படம் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment