இலங்கையில் மதுபான பயன்பாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் மது பயன்பாடு குறித்த சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை 79ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் மதுபான பயன்பாடு துரித கதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் மது வரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபான உற்பத்தியின் விற்பனையானது 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் மதுபான விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் வருமான வீழ்ச்சி மற்றும் மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment