இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர்.
தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.
இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் துபாயில் அவரின் கச்சேரி ஒன்று நவம்பர் மாதத்தில் நடக்க இருந்தது. ஆனால் இப்போது அந்த கச்சேரி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment