கப்பலில் இருந்து காப்பாற்றபட்ட இலங்கை மக்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை



அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த அகதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அகதிகளை ஐ.நா விடம் ஒப்படைக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கப்பலில் இருந்து காப்பாற்றபட்ட இலங்கை மக்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப  தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com  உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி  நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial