‘சர்தார்’ ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது


 இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும் சைபர் கிரைம் பற்றி பேசிய இயக்குனர் 2வது படத்தில் கல்விக்கான அவசியத்தை பேசி இருந்தார்.

இந்த ‘சர்தார்’ படத்தில் தண்ணீருக்கான அவசியத்தை பேசி இருக்கிறார்.

இந்திய உளவுத் துறையின் உளவாளியாக நடித்திருக்கிறார் கார்த்தி.

கதைப்படி…


ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது ஒரு தனியார் நிறுவனம்..

இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் முழுக்கத் தனியார்மயமானால்… அதற்கும் விலை வைக்கப்பட்டால் என்னென்ன பிரச்சினைகளை இந்த நாடு சந்திக்கும்.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கார்த்தி இதற்கு முன் சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

இந்த படத்தில் வயதானவர் கெட்டப் இளமையான கெட்டப்.. ஆனால் வயதான கெட்டப்பிலும் இளமையாகவே இருக்கிறார்.


முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் இளமையான கார்த்திக் சண்டை போடுவது போலவே உள்ளது. உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன். ஆனால் மூவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

முனீஸ்காந்த் நடிப்பில் கவர்கிறார். வில்லன் சங்கி பாண்டே ஸ்மார்ட் வில்லன்.

குட்டி பையன் ரித்விக். நல்ல அறிமுகம்.. ஆனால் ப்ளூ பிரிண்ட் பாத்தேன்.. என இவர் சொல்ல சொல்ல கார்த்திக்கு சொல்வது எல்லாம் ரொம்ப ஓவர்.

டெக்னீஷியன்கள்…


ஒளிப்பதிவில் குறையில்லை.. கலர்ப்புல்லாகவே இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்க விடுகிறது.. பாடல்கள் சுமார் ரகமே..

முக்கியமாக படத்தின் வசனங்களை ஓவர்டேக் செய்கிறது பின்னணி இசை. இதனால் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

நாம் தற்போது குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.. வருடங்கள் செல்ல செல்ல துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் கிடைக்கும் நீரும் முழுக்க முழுக்க வியாபாரம் ஆனால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திப்போம் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் தண்ணீரால் எத்தனை நாடுகளில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? என்பதையும் சொல்லி இருக்கிறார்.

ஆனால் தண்ணீர் வியாபாரத்தை இன்னும் விரிவாக சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial