விஷ்ணு விஷால் 2009ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.
இவர் அடுத்தடுத்து முண்டாசுப்பட்டி, குள்ள நரிக்கூட்டம், நீர்ப்பறவை, பலே பாண்டியா என்னும் படங்களில் நடித்தார். இந்த படங்களில் முண்டாசுப்பட்டி மற்றும் நீர்ப்பறவையில் இவருடைய நடிப்பு குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார்.
இன்று நேற்று நாளை, ஜீவா போன்ற நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஷ்ணு விஷாலுக்கு 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக எந்த படமும் இல்லாமல் ஹிட் படமே கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஷ்ணு விஷால்.. விவாகரத்துக்கு பின் விழும் பலத்த அடிகள்
என்னதான் நடிப்பில் அவ்வளவு திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கு அவர் மட்டுமே காரணம்.
படத்தில் நடிப்பதற்கு மட்டும் சம்பளம் வாங்கினால் தயாரிப்பாளர்கள் இவரை அணுகுவார்கள். ஆனால் இவரோ நடிப்பதற்கு மட்டுமில்லாமல் படத்தின் வியாபார ரீதியாக வரும் அனைத்திலும் கமிஷன் கேட்கிறாராம்.
கோலிவுட்டில் இதுபோன்ற விஷயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான் செய்து வருகிறார்.
அதாவது படத்தின் சம்பளத்தை மட்டும் வாங்காமல் படத்தின் வியாபார ரீதியாக கிடைக்கும் அத்தனையிலும் ரஜினிக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.
ரஜினிகாந்த் என்ன சொன்னாலும் தயாரிப்பாளர்கள் பணிந்து போவார்கள். ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஒன்று.
ஏற்கனவே மனைவியுடன் விவாகரத்து, இரண்டாம் திருமணம், நடிகர் சூரியுடன் பணப் பிரச்சனை என விஷ்ணு விஷாலின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கின்றது.
இதற்கிடையில் பாலிவூடில் ரன்வீர் சிங் போட்டோசூட் மாதிரி அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஏகப்பட்ட நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். இப்படி நிறைய எதிர்மறையான விஷயங்கள் இவரை சூழ்ந்து இருக்கின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி விஷ்ணு விஷாலுக்கு இப்போது தான் புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
மோகன் தாஸ் மற்றும் கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த வாய்ப்புகளை விஷ்ணு சரியாக பயன்படுத்தினால் மட்டுமே விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியும்.
முக்கியமான ஆட்களின் மூலம் கிடைத்த இந்த வாய்ப்புகளை எப்படி பயன்படுத்த போகிறார் என இனிதான் தெரியும்.
Post a Comment