நேற்று செவ்வாய்க்கிழமை சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
குரு பூசை தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பரமேஸ்வரன் ஆலயத்தினுள் உள்ள ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர், சேர்.பொன் இராமநாதனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட மலர்மாலைகள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியின் முன்னாள் உள்ள சேர். பொன்.
இராமநாதனின் திருவுருவச் சிலை மற்றும் பல்கலைக்கழக சபை அறையிலுள்ள சேர்.பொன் இராமநாதனின் திருவுருவப் படம் ஆகியவற்றுக்கு அணிவிக்கப்பட்டன.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராமநாதன் அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியர் த.சிற்றம்பலம், இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஶ்ரீ ச. பத்மநாபன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment