பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால், தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது வெற்றிகரமாக ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களில் ராபர்ட் மாஸ்டரும் ஒருவர்.
ஏனெனில் இவர் நடிகை ரச்சிதா தான் தனது கிரஷ் என சொல்லி முதல் நாளில் இருந்தே அவர் பின்னாடியே சுற்றி வந்தார்.
ஆரம்பத்தில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படியாக இருந்தாலும், நாளடைவில் அதுவே சலிப்பை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ராபர்ட் மாஸ்டரை வெளியேற்ற முடிவெடுத்த ரசிகர்கள் அவருக்கு குறைவான வாக்குகளை அளித்திருந்தனர். இதனால் கடந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டார் ராபர்ட்.
அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அனைவரையும் டார்லிங் என்று தான் அழைப்பார். அப்படி கூப்பிட்டே 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்தார் ராபர்ட்.
தற்போது எலிமினேட் ஆகி வெளியேறி உள்ள ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் மூலம் கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் மொத்தமாக 7 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
அவருக்கு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தமாக 7 வாரத்திற்கு ரூ.14 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment