ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்த திரைப்படம் தான் யசோதா.
இப்படம் இந்த மாதம் 11ம் திகதி வெளியானது.தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸான இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
மேலும் இப்படம் வெளியாகி இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 400,000 டாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் ரூ. 3.50 கோடி வசூலித்திருக்கிறது.அத்தோடு படத்தில் சமந்தாவின் நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.மேலும் யசோதா படத்தில் நடித்தபோதே அவருக்கு மயோசிடிஸ் என்னும் அரியவகை நோய் இருந்தது.
இருப்பினும் அதை படக்குழுவிடம் சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது தான் படக்குழுவுக்கே தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தது.அத்தோடு தற்பொழுது குணமடைந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment