தலதா மாளிகையின் ஒக்டோபர் மாத மின்சார கட்டணம் 28 இலட்சத்தை கடந்துள்ளமையினால் அதனை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
எனவே மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், மல்வத்து - அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளார்.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு மாற்று வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடப்படும் என தலைவர் உறுதியளித்துள்ளார்.
Post a Comment